E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0338/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

    1. 338/ '15

      கௌரவ நாமல் ராஜபக்ஷ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மகிந்தோதய 1000 பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்,

      (i) நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட மகிந்தோதய விஞ்ஞான கூடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய விஞ்ஞான கூடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய விஞ்ஞான கூடங்களில் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) தொழில்நுட்ப பாடத் துறைக்காக மகிந்தோதய தொழில்நுட்பவியல் விஞ்ஞான கூடங்களை (மூன்று மாடிக் கட்டடங்கள்) நிர்மாணிப்பதன் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்,

      (i) நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்பவியல் விஞ்ஞான கூடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்பவியல் விஞ்ஞான கூடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்பவியல் விஞ்ஞான கூடங்களின் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-25

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks