பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
343/'15
கௌரவ கனக ஹேரத்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காப்பட் இடப்பட்டு அபிவிருத்தி செய்வதற்காக முன்மொழியப்பட்டிருந்த மாவனெல்லை நகரம் தொடக்கம் ஹெம்மாத்தகம ஊடாக கம்பளை வரையிலான 26 கி.மீ. நீளமான வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஹிஜ்ராகம அல்-அஸ்ஹர் வித்தியாலயம் வரை, அதாவது 15 கி.மீ.வரை வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) 40 அடி அகலத்தில் நிர்மாணிக்கப்படுவதற்காக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த மேற்படி வீதியின் அகலமானது 34 அடிகள் வரை வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இவ்வாறு மேற்படி வீதியின் ஆரம்பத் திட்டம் மாற்றப்பட்டதன் மூலம், கொழும்பு – கண்டி பிரதான வீதியில், மாவனெல்லையிலிருந்து ஹெம்மாத்தகம வீதி ஆரம்பமாகும் இடத்தில் (S.O.ஹோட்டலுக்கு பக்கத்திலுள்ள சந்தி) தினசரி காணப்படுகின்ற வாகன நெரிசலுக்கு தீர்வுகள் கிடைக்குமா என்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி இடத்தில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலைக் குறைப்பதற்கு மாற்றுத் திட்டமொன்றை முன்வைப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks