பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
364/’15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 யூலை மாதம் தம்புள்ளையில் நடைபெற்ற இந்திய – இலங்கை கிரிக்கட் போட்டியின் போது, யூலை 18 ஆம் திகதி இரவு இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கியிருந்த கண்டலம ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார் என்பதையும் அவர் அங்கு விடியும் வரை தங்கியிருந்தார் என்பதையும்;
(ii) இது தொடர்பாக அப்போதைய கிரிக்கட் விளையாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் அப்போதைய கிரிக்கட் செயலாளருக்கு பிரதியொன்றுடன் கூடியதாக இந்திய முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்பதையும்;
(iii) இக்கடிதத்தின் உள்ளடக்கத்தின் படி இலஞ்சம் வழங்கும் முயற்சியொன்று இருந்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இது தொடர்பாக,
(i) போட்டித் தொடரை ஏற்பாடு செய்த நாட்டின் கிரிக்கட் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;
(ii) சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் எழுத்து மூல அறிக்கைகள் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் உள்ளதா;
(ii) ஆமெனில் அவற்றை சமர்ப்பிப்பாரா;
(iii) இன்றேல் இவ்வறிக்கைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர்;
(iv) அறிக்கைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பாரா;
(v) அவ்விசாரணையில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் பதவி வகிப்பவர் ஒருவர் குற்றவாளியாகக் காணப்படின் அவரை பதவியிலிருந்து நீக்குவாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-04-08
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-05-04
பதில் அளித்தார்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks