பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
367/ '15
கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முள்ளிக்குளம் சமூகத்தின் சமூக பொருளாதார, கலாசார, சுற்றாடல், அரசியல் உரிமைகள் அழிக்கப்படுகின்றன என்பதையும்;
(ii) யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமக்குச் சொந்தமான எதையும் எடுத்துச் செல்லாமல் உடனடியாக அவர்களின் வீடுகளை விட்டுச் செல்லுமாறு இராணுவம் கட்டளையிட்டது என்பதையும்;
(iii) அதன் நிமித்தமாக அவர்கள் கொடூரமாக தம் சொந்த இடங்களை விட்டு இடம்பெயரச் செய்யப்பட்டு கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதையும்;
(iv) தம் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, முள்ளிக்குள மக்கள் பல வழிகளில் முயற்சித்துள்ளதுடன், சனாதிபதி, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் பின்னே சென்றுள்ளனர், ஆனாலும் அதிகாரிகள் அவற்றைக் கண்டு கொள்ளாதிருந்தனர் என்பதையும்;
(v) முள்ளிக்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமின் காரணமாக, 150 குடும்பங்கள் தம் சொந்த இடங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) அவர்களைத் தம் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) அவர்களது நீண்ட கால மனக்குறைகளை நிவர்த்திப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகள் வழங்கப்படுகிறதா என்பதையும்;
(iii) அவர்கள் மீளக் குடியேற்றப்படாதிருப்பின், அவர்களுடன் கலந்துரையாடி மாற்றுக் காணிகள் வழங்கப்படுகிறதா என்பதையும்;
அவர் சபைக்குத் தொிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-01-27
பதில் அளித்தார்
கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks