E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0377/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 377/ '15

       

      கௌரவ பிரசன்ன ரணதுங்க,— உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     2011ஆம் ஆண்டில் மேல் மாகாண சபையினால் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றிய பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      (ii) சித்தியடைந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      (iii) சித்தியடைந்த அனைவருக்கும் தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா;

      (iv) இன்றேல், ஏன்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2014.12.27 இல் மேல் மாகாண சபையினால் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      (ii) சித்தியடைந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      (iii) இது வரை வழங்கப்பட்டுள்ள நியமனங்களின் எண்ணிக்கை யாது;

      (iv) நியமனங்கள் வழங்கப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை;

      (v) இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேலே  அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சையில் ஆசிரிய நியமனங்களை பெறுவதற்குத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாத பட்டதாரிகளுக்கு, மேல் மாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டமையை அறிவாரா;

      (ii) மேலே ஆ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடையாத பட்டதாரிகளையும் இவ்வாறே மேல் மாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (iii) இன்றேல், ஏன்;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2016-03-10

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks