E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0393/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ.

    1. 393/ ’15

      கௌரவ முகம்மது இப்ராஹிம் முகம்மது மன்சூர்,— கமத்தொழில் அமைச்சரைக்  கேட்பதற்கு,— 

      (அ)     (i)     2012/2013 ஆம் ஆண்டுகளில் விவசாய ஓய்வூதிய உரித்தினைப் பெற்ற சகலருக்கும் விவசாய ஓய்வூதியம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

                 (ii)    இன்றேல், அது ஏனென்பதையும்;

      (iii) செலுத்தப்படவில்லையெனில், அவ்வெண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) விவசாய ஓய்வூதியம் செலுத்தப்படாதவர்களுக்கு சலுகை வழங்க முடியுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2015 திசெம்பர் மாதமளவில் விவசாய ஓய்வூதிய உரித்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஆட்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தடையின்றி விவசாய ஓய்வூதியத்தை செலுத்த முடியுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-10

கேட்டவர்

கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks