E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0528/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 528/ '16

      கௌரவ புத்திக பத்திறண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மிளகு பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;

      (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் மிளகு உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிறாம்;

      (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மிளகைக் கொள்வனவு செய்கின்றதா;

      (iv) ஆமெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மிளகின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மிளகு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;

      (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-18

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-02-21

பதில் அளித்தார்

கௌரவ தயா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks