E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0563/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 563/ ’16 கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) நாடு முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) இலங்கையில் முன்பள்ளிச் சிறார்களுக்கென உரிய முறையில் தயாரிக்கப்பட்ட கல்வி முறையொன்று உள்ளதா என்பதையும்; (iii) முன்பள்ளி ஆசிரியர்களுக்குரிய சம்பளத் திட்டம் எந்த வகுதியைச் சேர்ந்தது என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) வடமாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்துள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) மேற்படி முன்பள்ளிகளில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iii) அவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் செலுத்தப்படுகின்றது என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) (i) பாடசாலை செல்லவிருக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கு பாதுகாப்பு படைகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களினால் கற்பிக்க முடியுமா என்பதையும்; (ii) நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த முறை அமுலில் உள்ளதா என்பதையும்; (iii) முன்பள்ளிச் சிறார்களின் சீருடையில் இராணுவச் சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-05

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks