E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0596/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. 596/ '16

      கௌரவ லக்கி ஜயவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை வழங்கும் நிகழச்சித்திட்டத்தின் கீழ் இற்றைவரை திறந்துவைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) இந்த ஆய்வுகூடங்களுக்கு கணனிகளையும் துணைப்பாகங்களையும் கொள்வனவு செய்வதற்கு செலவிடப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) இந்த கொள்வனவுகள் முறைசார்ந்த பெறுகைகள் நடைமுறையின் கீழ் நடைபெற்றுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவற்றை அங்கீகரித்தவர்கள் யாவரென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இந்த கொள்வனவுகளை மேற்கொள்கின்றபோது உரிய தரத்தைக் கொண்டிராத உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதென்பதையும், நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதென்பதையும் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யாவரென்பதையும்;

      (iii) இதன் விளைவாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவென்பதையும்;

      (iv) இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையை துரிதமாக மேற்கொள்வாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-23

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks