E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0661/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

    1. 661/ '16

      கௌரவ ஹிருணிக்கா பிரேமசந்திர,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (​i) இலங்கையில் பெண் என்ற ஒரே காரணத்தினால் சமூகத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் பாரபட்சம் காட்டப்பட்ட பெண்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு இன்றளவில் ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மதம் மற்றும் இனங்களுக்கமைய பெண் உரிமைகள் மாறுபட்டிருப்பதன் மூலம் இலங்கையின் பிரதான சட்டத்துக்கு ஏதேனும் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத் தாக்கம் யாதென்பதையும்;

      (iii) மேற்படி தாக்கத்தினால் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண்கள் ஏதேனும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்களா என்பதையும்;

      (iv) ஆமெனில், இலங்கையில் வசிக்கின்ற சகல பெண்களையும் ஒரே சட்டத்துக்கு உட்படுத்துவதற்கான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks