E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0662/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

    1. 662/ '16

      கௌரவ ஹிருனிகா பிரேமசந்திர,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) 2002 ஆம் ஆண்டில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 1491 ஊழியர்கள் தொழிலை இழந்தார்கள் என்பதையும்;

      (ii) இவர்களை சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வுபெறச் செய்தமை இதற்கு காரணமாக அமைந்ததென்பதையும்;

      (iii) 2010 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்படி ஊழியர்களை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் முடிவடைந்துள்ள போதிலும், இற்றைவரை இவ்வூழியர்களுக்கு எந்தவித நீதியும் நிறைவேற்றப் படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி ஊழியர்களுக்கு நீதியை நிறைவேற்றுவாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks