E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0688/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 688/ '16

      கெளரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பியர் கம்பனிகள் அனுசரணை வழங்குகின்றன என்பதையும்;

      (ii) அந்த போட்டிகள் நடைபெறும் போது பியர் கம்பனிகள் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதையும்;

      (iii) இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்படுகின்றார்கள் என்பதையும்

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படுகின்ற வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுசரணையாளர்களை தேடிக்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய முறையியல் மற்றும் பிரமாணங்கள் அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த முறையியல் மற்றும் பிரமாணங்கள் யாவை என்பதையும்;

      (iii) இன்றேல், அதற்கான முறையியல் மற்றும் பிரமாணங்களை சிபாரிசு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இந்த கிரிக்கெட் போட்டிகளின் போது போதைப் பொருள் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில் அவை யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-30

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks