E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0690/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 690/ '16

      ​கௌரவ புத்திக பத்திறண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பிரம்பு சார்ந்த உற்பத்திக் கைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்கள் தற்போது அக்கைத்தொழிலிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்பதையும்,

      (ii) மூலப்பொருள் மற்றும் சந்தை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதையும்,

      (iii) இது இந்நாட்டுக்கு பெருமளவு வௌிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரக் கூடிய ஒரு கைத்தொழிலாகுமென்பதையும்,

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) பிரம்பு சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்,

      (ii) ஆமெனில், 2015 ஆம் ஆண்டினுள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்

      (iii) ஏற்றுமதி செய்யப்படுவதில்லையெனில், ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

      (iv) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) நாட்டினுள் பிரம்புக் கைத்தொழிலுக்கு தேவையான சந்தையை விரிவுபடுத்த

      அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்,

      (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks