E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0702/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 702/ '16

      கௌரவ விஜித்த ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (​i) அரசாங்க ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும்;

      (ii) கள மற்றும் மருத்துவமனை கடமைகளில் ஈடுபட்டுள்ள இரு சாராருக்கும் மேற்படி மோட்டார் சைக்கிள் உரித்தாகுமென்பதையும்;

      (iii) சில மாகாணங்களில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், சில மாகாணங்களில் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்பதையும்;

      (iv) குறிப்பாக, கம்பஹா மருத்துவமனையில் கடமையாற்றுகின்ற குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை மோட்டார் சைக்கிள்களை வழங்குதல் நடைபெறவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கம்பஹா உட்பட நாடு முழுவதிலும் மேற்படி மோட்டார் சைக்கிள் கிடைக்காத அனைவருக்கும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-11

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks