E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0718/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 718/ '16

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) அநுராதபுரம் மாவட்டத்தில்,

      (i) அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் மொழிமூல தேசிய பாடசாலையான அ/சாஹிரா வித்தியாலயம் கவனிப்பாரற்ற நிலைக்குள்ளாகியமையால் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றதென்பதையும்;

      (ii) "1000 பாடசாலைகள்" வேலைத்திட்டத்தில் காடாண்டுகம, ஜாயா முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலயம் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும் தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடம் தவிர்ந்த வேறு எவ்விதமான வசதிகளும் இன்றளவில் வழங்கப்படவில்லை என்பதையும்;

      (iii) சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பவியல் போன்ற பாடங்களைப் போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேலே அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலையில்,

      (i) உயர்தர விஞ்ஞானப் பிரிவில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகின்ற;

      (ii) புதிய கட்டடமொன்று வழங்கப்படுகின்ற;

      (iii) அதிபருக்கான அலுவலகமும் கேட்போர் கூடமொன்றும் வழங்கப்படுகின்ற;

      (iv) குடிநீர் சுத்திகரிப்பு கருவியொன்று வழங்கப்படுகின்ற;

      திகதி யாதென்பதை தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேலே அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அவசியமான ஏனைய வசதிகள் வழங்கப்படுகின்ற;

      (ii) மேலே அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற;

      திகதி யாதென்பதையும் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-26

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks