E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0719/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 719/'16

      கௌரவ இஷாக் ரஹுமான் ,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்ற குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பாரிய அளவிலான நீர் வழங்கும் திட்டங்களைச் செயற்படுத்திய போதிலும் அவற்றினால் போதியளவு பயன் கிடைக்கவில்லை என்பதையும்;

      (ii) இம்மாவட்டத்தில் 25,000 க்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் இவர்களில் 11,000 பேர் மரணத்தை அண்மிய நிலையில் தமது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர் என்பதையும்;

      (iii) குடி நீரில் கட்மியம் போன்ற இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளமையால் இவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதையும்;

      (iv) சிறு நீரக நோயைத் தடுக்கும் நோக்கத்துடன் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் போதியதாக இல்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) குடி நீர் பிரச்சினை நிலவும் பிரதேசங்களுக்கு குடி நீர் வழங்குவதற்கான புதிய நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பாரா;

      (ii) ஆமெனில், அது எத்திகதியில்;

      (iii) நோயாளிகள் பரவலாக வாழும் பிரதேசங்களுக்கு நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்படும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-26

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks