E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0721/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 721/ '16

      கெளரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) தற்போது அநுராதபுரம் மாவட்டத்தின், கிராமிய வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கான பெரும் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும்;

      (ii) அதன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

      (iii) அநுராதபுரம் மாவட்டத்தின், மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில், இக்கிரிகொல்லாவ கிராமத்தில் மத்திய மருத்துவ நிலையம் பல காலமாக மூடப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மருத்துவர் பற்றாக்குறை நிலவுகின்ற மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (ii) இக்கிரிகொல்லாவ மத்திய மருத்துவ நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks