பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
723/ '16
கௌரவ ரி. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பொதுப்படுகடன் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) மொத்த பொதுப்படுகடன் தொகை தேசிய வருமானத்தின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி சதவீதம் 2004 ஆம் ஆண்டில் இருந்த பொதுப்படுகடன் தொகையின் சதவீதத்தையும் விட குறைவானதா அல்லது அதிகமானதா என்பதையும்;
(iv) அக்கடனைச் செலுத்தித் தீர்ப்பதற்கு அரசு பிரேரிக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) அண்மைக் காலம் முதல் மேற்படி கடன் தொகை சம்பந்தமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் இந்நாட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு பணத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி அறிவித்தல்களை பிரச்சாரம் செய்வதற்கு அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) அரச மற்றும் தனியார் வானொலி ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) தினசரி மற்றும் வாராந்த பத்திரிகைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-26
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-21
பதில் அளித்தார்
கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks