பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
807/ '16
கெளரவ பிமல் ரத்நாயக்க,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெடிக்கச் செய்யும் நடவடிக்கைகளின்போது, அம்பாந்தோட்டை, மாகம் வீதி, 24/5 ஆம் இலக்க இல்லத்தில் வசிக்கின்ற திருமதி ஏ.டபிள்யு. உம்மு சலீமா மற்றும் அவரின் வயோதிப கணவர் வசித்துவந்த வீட்டுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும்;
(ii) இது பற்றி இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் அம்பாந்தோட்டை பிரதேச செயலாளருக்கும் அறிவித்த பின்னர், இடம்பெற்றுள்ள சேதத்தை ஏற்றுக் கொண்டு, சேதமடைந்துள்ள வீடு மற்றும் காணிக்கு நட்டஈடு பெற்றுத் தருவதாகக் கூறி, தாமதிக்காது அவ்வீட்டிலிருந்து வெளியேறுமாறும், நட்டஈடு வழங்கும் வரை, வாடகை வீட்டுக்கு மாதாந்தம் வாடகையைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்ததற்கு அமைய இவர்கள் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வாடகை வீட்டில் குடியமர்ந்துள்ளார்கள் என்பதையும்;
(iii) மாதாந்தம் வழங்குவதாக வாக்குறுதியளித்த வாடகையைப் பல தடவைகள் கோரிய பின்னர், அதிகார சபையானது 6 மாதங்களுக்கான வாடகையை ஒரே தடவையில் செலுத்தியதுடன், தற்போது கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) நட்டஈடு செலுத்தும் வரை இணங்கிய மாதாந்த வாடகையை, நிலுவை வாடகையுடன் செலுத்தும் திகதி யாது என்பதையும்;
(ii) இழந்துள்ள காணி மற்றும் வீட்டுக்கு நட்டஈடு செலுத்தப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-05
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-05
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks