E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0808/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. கெளரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது 1500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் பொல்பித்திகம, இருதெனியாய குடியேற்றம் 1970 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் பயிர்செய்கைப் போராட்டத்தின் கீழ் குடியிருப்பாக ஆரம்பமானது என்பதையும்;

      (ii) மேற்படி காணிகளின் சட்டபூர்வமான உரிமை குடியேற்றவாசிகளுக்கு இல்லாமையின் காரணமாக இவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) நிரந்தர வீடுகள், வீதிகள், பாடசாலைகள், கூட்டுறவு சங்கங்கள், சனசமூக மண்டபங்கள், மின்சாரம், சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அரசாங்க நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் குடியேற்றத்தின் காணிகளின் உரிமை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;

      (ii) மேற்படி அசெளகரியங்கள் காரணமாக சிலவேளை வனசீவராசிகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள்கூட உருவாகின்ற சூழலில் இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாது என்பதையும்;

      (iii) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நாமல் கருணாரத்னவினால் 6 ஆவது பாராளுமன்றத்தின் வனசீவராசிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரச்சினைக்கு வழங்கப்பட்ட தீர்வு/ தீர்மானம் யாது என்பதையும்;

      (iv) மேற்படி தீர்வு/தீர்மானத்திற்கு அமைய, இக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-21

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-21

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks