பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
839/ '16
கௌரவ புத்திக பத்திரண,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சில நகர்சேர் தூரப் பயணச் சேவை கடுகதி புகையிரதங்களிலுள்ள உறங்கல் பெட்டிகள் சீரழிந்துள்ளனவென்பதையும்;
(ii) சில புகையிரதங்களில் சிற்றுண்டிசாலை வசதிகள் இல்லையென்பதையும்;
(iii) தற்போதுள்ள சிற்றுண்டிசாலைகளும் முறைசார்ந்தவையாக இல்லையென்பதையும்;
(iv) புகையிரத சிற்றுண்டிசாலைகளில் தரக்குறைவான உணவு பானங்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்பதையும்;
(v) மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களின் காரணமாக புகையிரதப் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகின்றனரென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி புகையிரதங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) அதற்காகச் செலவாகும் பணத்தொகை மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-12-09
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks