E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0841/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 841/ '16

      கௌரவ புத்திக பத்திரண,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மாத்தறை மாதா ஆலயம், மடு தேவாலயம், ராகம பெசிலிகா தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் இலங்கை கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க பக்தர்களின் பிரதான புனித தலங்களாகும் என்பதையும்;

      (ii) இப்புனிதத் தலங்களுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு தேவையான பொது வசதிகள் ஆகக்குறைந்த மட்டத்தில் உள்ளன என்பதையும்;

      (iii) இதன் காரணமாக இப்புனிதத் தலங்களில் நடைபெறுகின்ற வருடாந்த உற்சவங்களின்போது பக்தர்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இப்புனிதத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) வருடாந்த உற்சவங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி வசதிகள் உள்ளிட்ட வேறு உதவிகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-21

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks