E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0857/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 857/ '16

      கௌரவ புத்திக்க பத்திறண,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நில்வளா திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் காணிகள் இக் கருத்திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;

      (ii) மேற்படி சுவீகரிப்பின் பின்னர் இதற்கு உரிய முறையியலின் கீழ் இருமடித்தாள் தயாரிக்கப்படவில்லையென்பதையும்;

      (iii) எனவே கருத்திட்டத்திற்குரிய காணிகள் வேறு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வருகிறதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) நில்வளா திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்ட தோட்டக் காணி மற்றும் வயல் காணிகளின் அளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) இக்காணிகளில் ஒழுங்கான முறையில் இருமடித்தாள்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iii) நில்வளா திட்டத்திற்குரிய காணிகள் பற்றி மீள் கணிப்பீடொன்றை மேற்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) காணிகளின் முறைகேடான பயன்பாடு பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) இம்முறைப்பாடுகள் தொடர்பாக மேகொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks