E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0875/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

    1. 875/ '16

      கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவின், போருவதண்ட மேற்குக் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதிக்கு எல்லையில் ஒதுக்குக் காணித் துண்டொன்று சமூக சேவைகள் அடிப்படையில் "செனசும சுந்தர" என்ற மன்றத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) ஒதுக்கப்பட்ட காணித்துண்டொன்றை குத்தகைக்கு வழங்குவது சட்டவிரோதம் என்பதனால் 2013.11.26 ஆம் திகதி நடைபெற்ற காணி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் "அந்த ஒதுக்கப்பட்ட காணியை மீண்டும் கையளிக்குமாறு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிப்பதாகவும், அவ்வாறு செயற்படாவிடின், காணியை சுவீகரிக்க நேரிடும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்." என கூட்டக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும்;

      (iii) அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் இதுவரை காணி கையேற்கப்படவில்லை என்பதையும்;

      (iv) 2014.06.24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தளப் பரிசோதனையின் போது சமூக சேவைகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணியில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கழிவு நீர் மற்றும் பொலித்தீன்கள் மாவக் ஓயாவில் கலக்கப்படல் மற்றும் பொலித்தீன்களை எரித்தல் போன்ற தவறான நடவடிக்கைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தின்படி இந்தக் காணி மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்படும் திகதி யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-12

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks