பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
884/ '16
கெளரவ அநுர திசாநாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) க.பொ.த. (உயர்தர) வணிகப் பாடப் பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவதற்கு தகைமைபெறுகின்ற மாணவர்களுக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தற்போது பேணிவரப்படுகின்ற பட்டப் பாடநெறிகள் யாவை என்பதையும்;
(ii) 2014/2015 மற்றும் 2015/2016 கல்வி ஆண்டுகளில் மேற்படி பாடநெறிக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, பாடநெறிகளுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேலே (அ) (ii) இல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட,
(i) மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) ஆகக் குறைந்த தகைமையைக் கொண்ட மாணவரின் "Z" பெறுமதி மற்றும் மாவட்ட திறமை (பாடநெறி மற்றும் கல்வி ஆண்டுக்கு அமைய) யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கல்வி நடவடிக்கைகள் தவிர்ந்த வேறு துறைகளில் திறமைகளைக் காண்பித்த மாணவர்களை "விசேட திறமை" வகுதியின் கீழ், பல்கலைக்கழக பட்டப் பாடநெறிகளுக்கு அனுமதிக்கும் முறையியல் யாது என்பதையும்;
(ii) மேலே (அ) (i)இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடநெறிக்கும் "விசேட திறமை" இன் கீழ், உரிய கல்வி ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-06
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks