E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0895/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 895/ '16

      கெளரவ இம்ரான் மஹ்ரூப்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி மாவட்டப் பணிப்பாளர் பதவி எவ்வளவு காலமாக வெற்றிடமாக உள்ளது என்பதையும்;

      (ii) வெற்றிடமான காலப்பகுதியில் மேற்படி பதவியில் பதில் கடமையாற்றியவர்களின் பெயர்கள், தகைமைகள் மற்றும் வேறு விபரங்கள் யாவை என்பதையும்;

      (iii) இதுவரை நிரந்தர அலுவலர் ஒருவரை நியமனம் செய்யாமைக்கான காரணம் யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி வெற்றிடத்தை நிரப்புவதற்கு திருகோணமலை மாவட்ட செயலாளரினால் அலுவலர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார் என்பதையும்;

      (ii) மேற்படி அலுவலர் இலங்கை திட்டமிடல் சேவைக்கு உரித்தாவதன் காரணமாக வாழ்வின் எழுச்சித் திணைக்களம் மேற்படி சிபாரிசை அங்கீகரிக்கவில்லை என்பதையும்;

      (iii) எனவே, மேற்படி பதவி தொடர்ந்தும் வெற்றிடமாகக் காணப்படுகின்றது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (இ) (i) திருகோணமலை வாழ்வின் எழுச்சி மாவட்டப் பணிப்பாளர் பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அல்லது மாவட்ட செயலாளர் சிபாரிசு செய்துள்ள அலுவலருக்கு மேற்படி நியமனத்தை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணம் யாது என்பதையும்;

      (ii) மாவட்ட செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்ட அலுவலருக்கு மேற்படி நியமனத்தை வழங்குவதன் மூலம் வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தடையேதும் ஏற்படுமா என்பதையும்;

      (iii) திருகோணமலை மாவட்ட செயலாளர் சிபாரிசு செய்துள்ள அலுவலரை திருகோணமலை மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளராக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-11

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks