பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
898/'16
கௌரவ சமல் ராஜபக்ஷ,— கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) 2015 சிறுபோகம், பெரும்போகம் மற்றும் 2016 சிறுபோகம் ஆகிய மூன்று போகங்களில் கிடைத்த மொத்த நெல் விளைச்சல் எவ்வளவு;
(ii) இதில், நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்த நெல்லின் அளவு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் களஞ்சியத்திற்கிணங்க வெவ்வேறாக எவ்வளவு;
(iii) சபையினால் ஒரு கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்ட விலை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016.07.31 ஆந் திகதியன்று மேற்படி களஞ்சியங்களில் எஞ்சியிருந்த நெல்லின் கையிருப்புத்தொகை எவ்வளவு;
(ii) மேற்படி களஞ்சியங்களிலிருந்து விற்பனை செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு வெவ்வேறாக எவ்வளவு;
(iii) மேற்படி நெல் சந்தைப்படுத்தப்பட்ட ஆட்கள் அல்லது கம்பனிகள் மற்றும் அவர்களுக்கு நெல் சந்தைப்படுத்தப்பட்ட விலை யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) சதொச மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களுக்கு விநியோகித்துள்ள நெல்லின் அளவு யாது;
(ii) ஆட்களுக்கும் கம்பனிகளுக்கும் நெல் விற்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;
(iii) விலங்குத் தீனிக்காகவும் மதுபான உற்பத்திக்காகவும் வழங்கப்பட்ட நெல்லின் அளவு மற்றும் சந்தைப்படுத்திய விலைகள் வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-16
கேட்டவர்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks