E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0902/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகியுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய அரசாங்கத்தின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அல்லது வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், மேற்படி குழு நியமிக்கப்பட்டு அல்லது வேலைத்திட்டமொன்று தயாரிக்கபட்டு இருப்பது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழா; ஆமெனில், மேற்படி அங்கீகாரம் பெறப்பட்ட திகதி யாது;

      (iii) அரசியல் பழிவாங்கல்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கவனத்திற் கொள்ளப்படும் கால எல்லை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் யாது;

      (ii) அவ்வாறு பழிவாங்கலுக்கு ஆளாகி, நிவாரணங்கள் பெற்று, பதவியுயர்வு பெற்றுள்ளவர்களின் பெயர், பழிவாங்கலுக்கான காரணம் மற்றும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் தனித்தனியாக யாது;

      (iii) இவர்களுக்கு பதவியுயர்வோடு நிலுவைச் சம்பளம் வழங்கப்படுகின்றதா;

      (iv) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-25

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks