E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0910/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. 910/'16

      கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாம் திறந்து வைக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

      (ii) அந்த முகாம் தொடர்ந்தும் பேணிவரப்படுகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனில், தற்போது அந்த முகாமில் வசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iv) அங்கு மலசலகூடங்கள், நீர் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (v) அந்த அகதிகளை வேறு இடமொன்றில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அது யாது என்பதையும்;

      (vii) பல வருடங்களாக வவுனியாவில் இயல்பு வாழ்கைக்கு பழகிப்போயுள்ள அந்த மக்கள், சிங்கள - தமிழ் நல்லிணக்கத்தை பாதுகாத்து அந்தப் பிரதேசத்தில் வாழ்வதனால் அவர்களுக்கு அதே இடத்தில் வீடமைப்புத் தொகுதியொன்றை அமைத்து குடியமர்த்த முடியாமைக்கான காரணம் யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-19

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks