E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0913/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித பேருகொட, பா.உ.

    1. 913/ '16

      கௌரவ விஜித்த பேருகொட,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கடந்த ஐந்தாண்டு காலத்தினுள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்,

      (i) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை;

      (ii) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை;

      (iii) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையின் சதவீதமாக;

      (iv) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் மாணவர் உதவித்தொகை கிடைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை;

      (v) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் பிரசித்திபெற்ற பாடசாலை களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை;

      ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் போது சில பரீட்சை நிலையங்களில் பிரச்சினைகளும் குறைபாடுகளும் அறிக்கையிடப்பட்டன என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா;

      (ii) ஆமெனில், அத்தகைய சம்பவங்கள் அறிக்கையிடப்பட்ட பரீட்சை நிலையங்கள் யாவை;

      (iii) அச்சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர்;

      (iv) மேற்படி பொறுப்புக் கூறவேண்டிய ஆட்கள் தொடர்பில் முறைசார்ந்த விசாரணை நடாத்தப்படுமா;

      (v) பிரச்சினைகளை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (vi) ஆமெனில், இம்மாணவர்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-16

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks