பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
930/ '16
கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ரூபா 03 பில்லியன் தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) சபைக்கு சொந்தமான பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கு மின்சார சபையின் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் தவறியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பணத்தை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக முதலீடு செய்வதற்கு தீர்மானித்த சந்தர்ப்பத்தில்,
(i) மின்சார சபையின் தவிசாளர்;
(ii) பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்;
(iii) அப்போதைய, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்;
யாவர் என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தீர்மானிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி முதலீட்டின் உற்பத்திதிறன் தொடர்பாக சிபார்சு செய்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி (ii) குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்படி (iii) மற்றும் (iv) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vi) இலங்கை மின்சார சபையின் உள்ளக கணக்காய்வுச் செயற்பாட்டை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-18
கேட்டவர்
கௌரவ சந்திம கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks