E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0933/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சந்திம கமகே, பா.உ.

    1. 933/ '16

      கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 - 2025 ஆண்டுக்கான இலங்கையின் சக்தி அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சக்தித் துறையில் "கரியமில தடப் பதிவை" 5% ஆல் குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி இலக்கை அடைவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) 2015 இல் பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் மேற்கூறப்பட்ட இலக்குகள் பொருந்துகின்றனவா என்பதையும்;

      (iv) இன்றேல், இலங்கையின் சக்தித் துறையில் "கரியமில தடப் பதிவுடன்" இணைந்த கொள்கைகளை சர்வதேச தரங்களுக்கு இணங்குகின்றவாறு திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-23

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks