E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0935/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

    1. 935/ '16

      கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2005 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை ஒவ்வொரு வருடத்திலும் அணுசக்தியின் பாதகமற்ற உள்ளீடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக அரசாங்கம் முதலீடு செய்துள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (ii) சுற்றாடல், கைத்தொழில், சுகாதாரம் மற்றும் கமத்தொழில் ஆகிய விடயங்கள் தொடர்பாக, இலங்கையினுள் அணுசக்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையை அறிவாரா என்பதையும்;

      (iii) அணுசக்தி தொடர்பிலான பாதகமற்ற உள்ளீடுகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசாங்கம் எதிர்காலத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கும் பணத்தொகை யாது என்பதையும்;

      (iv) தற்போது இலங்கையினுள் அணுசக்தி பயன்படுத்தப்படும் துறைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-18

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks