பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
943/ '16
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) புளுமெண்டல் மற்றும் மீதொட்டமுல்ல ஆகிய இடங்களில் திரண்டுள்ள கழிவுகளை புகையிரதம் மூலம் எடுத்துச் சென்று வனாதவில்லுவ, அருவக்களு பிரதேசத்தில் 80 ஏக்கர் காணியில் துப்புரவேற்பாட்டு ரீதியிலான நிரப்பலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதென்பதையும்;
(ii) இக்கருத்திட்டத்தின் ஊடாக கொலன்னாவ, மீதொட்டமுல்லவில் குப்பைகூள பரிமாற்ற நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு, புகையிரத பாதைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டதென்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இக்கருத்திட்டத்திற்கு ரூபா 14,000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததென்பதையும்;
(iv) 2014 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கருத்திட்டத்தின் முதல் 02 கட்டங்களின் பெறுகைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இக்கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதெனில், அதற்குரிய காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-06
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-08
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks