E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0994/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 994/ '16

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) 2016 செப்தெம்பர் 24ஆம் திகதி இராணுவ வைத்தியசாலைக்கு உதவும் பொருட்டு "வாயு" என்ற பெயரில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவிருந்தது என்பதையும்;

      (ii) மேற்படி நிகழ்ச்சிக்காக இராணுவ வைத்தியசாலையில் பணியாற்றும் மேஜர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளை வகிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு ரூபா 7500/- அனுமதிச் சீட்டுக்கள் இரண்டினையும், ஏனைய பதவிகளை வகிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு ரூபா 7,500/- அனுமதிச் சீட்டு ஒன்றையும் கொள்வனவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்பதையும்;

      (iii) அத்தகைய அதிகூடிய தொகையைச் செலுத்த முடியாமல் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) இவ்வாறு பலவந்தமாக பெற்ற பணத்தை உத்தியோகத்தர்களுக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-02

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks