E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1004/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டதா என்பதையும்;

      (ii) இவ்வைப்பீடுகளைக் கணக்கிட முடியுமா என்பதையும்;

      (iii) இதுவரையில் அவர்களின் தங்கம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லை யென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;

      (iv) மேற்படி (i) தொடர்பில் கிடைக்கக் கூடியதாகவுள்ள விபரங்கள்;

      (v) இக்கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-18

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-25

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks