E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1008/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேசிய பாதுகாப்புக்கும் மற்றும் சனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாகக் காணப்படுவதனால், 2015.01.08 ஆம் திகதி இரவில் சனாதிபதித் தேர்தல் முடிவுகளை இடைநிறுத்தும் சதித்திட்டமொன்று குறித்து முன்னுரிமை அடிப்படையில் புலனாய்வு செய்யுமாறு கோரி, 2015.01.14 ஆம் திகதி, அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளார் என்பதையும்;

      (ii) இது தொடர்பில் நான் முன்வைத்த பாராளுமன்ற வாய்மூல வினாவுக்கு 2016.03.09 ஆந் திகதி விடை அளித்த, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப் பெறாமையால் மேற்கொண்டு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிட்ட புலனாய்வு அறிக்கை சட்ட மாஅதிபருக்கு கிடைக்கப்பெற்ற திகதி யாது;

      (ii) மேற்குறிப்பிட்ட புலனாய்வு பற்றிய சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்ட திகதி யாது;

      (iii) சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் இதுவரையில் அனுப்பிவைக்கப் படவில்லையெனில், இதற்கு ஏதுவான காரணிகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-21

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-26

பதில் அளித்தார்

கௌரவ சாரதீ துஷ்மந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks