E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1010/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

    1. 1010/ '16

      கெளரவ நாமல் ராஜபக்ஷ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) அம்பாந்தோட்டை வரை நிர்மாணிக்கப்படவுள்ள கடுகதி நெடுஞ்சாலைக்கான காணிகளை சுவீகரித்தல் முடிவடைந்துள்ளதா என்பதையும்;

      (ii) அந்தக் காணிகளுக்கான இழப்பீடு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், இழப்பீட்டுத்தொகைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி உரிமையாளர்களாக இனங்காணப்பட்ட அத்துமீறிக் குடியிருப்பவர்கள், உரிமப் பத்திரங்களைப் பெற்றுள்ளவர்கள், அறுதி உறுதிகளைப் கொண்டுள்ளவர்கள் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) இவர்களது பெயர்கள், முகவரிகள், பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடிப்படையில் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் இதுவரை இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை; அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

      (iv) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் இதுவரை இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படாதவர்களின் எண்ணிக்கை, அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

      (v) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) வெளியேற்றப்படும் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு காணித்துண்டொன்று வழங்கப்படுமா என்பதையும்;

      (ii) அவர்களுக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்குப் போதுமான இழிப்பீட்டுத் தொகையொன்று வழங்கப்படுமா;

      (iii) ஆமெனில், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-01

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks