E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1028/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

    1. 1028/ '16

      கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசகரும மொழிக் கொள்கை காரணமாக 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருமளவிலான அரச ஊழியர்கள் தொழில்களை இழந்தனரென்பதையும்;

      (ii) அதற்கான நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 1991.08.23 ஆந் திகதிய 37/91 ஆம் இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டதென்பதையும்;

      (iii) அப்போது நாட்டில் நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலானோருக்கு அதிலிருந்து எதிர்பார்த்த நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள இயலாமல் போனதென்பதையும்;

      (iv) பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்கள் எவ்விதமான நிவாரணமும் கிடைக்காமல் உள்ளனரென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி சுற்றறிக்கையை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக வௌியிடுவாரா;

      (ii) பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அல்லது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks