E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1030/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

    1. 1030/ '16

      கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) அரச சேவைக்கு புதிதாக நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களின் நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு முன்னர் இவர்கள் சம்பந்தமாக நியமன அதிகாரியினால் பாதுகாப்பு இசைவு அறிக்கை பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதையும்;

      (ii) நியமனம் பெறுனருடன் ஏதேனும் எதிர்ப்பினைக் கொண்ட எவரேனும் ஒருவரினால், இவர் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு உதவி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டால் பாதுகாப்பு பிரிவுகளினால் இவருக்கான அங்கீகாரம் நிராகரிக்கப்படுகின்றதென்பதையும்;

      (iii) இதன் காரணமாக சம்பந்தப்பட்ட நியமனம் முடிவுறுத்தப்படுகின்றது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ்வாறு முடிவுறுத்தப்பட்டுள்ள நியமனங்களை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

      (ii) நல்லாட்சியின் கீ்ழ், நியமனங்களுக்காக பாதுகாப்பு இசைவு அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும் நடைமுறையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

      (iii) அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-27

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks