பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1036/ '16
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் கம்பஹா மாவட்டம் உள்ளடங்குகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;
(iii) கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் "கொழும்பு பெரும்பாக நகரப் போக்குவரத்து மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக" ஒதுக்கப்பட்ட ரூபா. 714 மில்லியன் தொகையைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிச்சுற்றுவட்ட மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான புகுமுக வழிகளை விஸ்தரிக்கும் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள புகையிரத வீதிகள் மற்றும் பேருந்து முனையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் காரணமாக பொது மக்களின் பயண நேரம் ஏற்கெனவே இருந்ததை விட எவ்வளவு குறைவடைந்துள்ளது என்பதையும்;
(v) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படவில்லையெனில், அதற்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகைக்கு என்ன நடைபெற்றதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-21
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks