பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1038/ '16
கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் கறுவா, மிளகு, பாக்கு, கராம்பு, வெற்றிலை மற்றும் கொக்கோ ஆகிய பயிர்களின் நிலைமையுடன் ஒப்பிடுமிடத்து 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பயிரினதும் ஏற்றுமதி அதிகரித்துள்ள சதவீதம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) புதிய பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுகளில் பயிர்ச் செய்கை நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள ஹெக்டேயர்களின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) உருவாக்கப்பட்டுள்ள தயாரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்கொள்ளப்பட்டுள்ள இயந்திர சாதன விநியோகங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) ஆரம்பிக்கப்பட்டுள்ள சேதனப் பசளை கிராமங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் பூங்காக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவில்லை எனில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ரூபா 500 மில்லியன் தொகை என்ன விடயத்துக்காக பயன்படுத்தப்பட்டதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கம்பஹா மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) இதன் காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ள அளவு எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-23
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-23
பதில் அளித்தார்
கௌரவ தயா கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks