E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1075/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 1075/ '16

      கௌரவ பிமல் ரத்நாயக்க,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) நாடு முழுவதும் தபால் திணைக்களத்திற்கு சொந்தமான 3410 உப தபால் அலுவலகங்கள் காணப்படுகின்றன என்பதையும்;

      (ii) அலுவலகங்களுக்கான கட்டிடங்களைத் தேடுதல் உப தபால் நிலைய பொறுப்பதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதையும்;

      (iii) உப தபால் அலுவலகமொன்றை கொண்டுநடத்துவதற்கு மாதாந்த வாடகையாக உப தபால் அலுவலக பொறுப்பதிகாரியொருவருக்கு ரூபா 250/- மட்டுமே செலுத்தப்படுகின்றதென்பதையும்;

      (iv) இத்தகைய சிறு தொகையான மாதாந்த வாடகைக்கு கட்டிடங்களை வாடகைக்கு பெற முடியாமையால் பெரும்பாலான உப தபால் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு தமது சம்பளத்திலிருந்து பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதென்பதையும்;

      (v) பெறப்பட்டுள்ள சில கட்டிடங்களில் மலசலகூட (துப்புரவேற்பாட்டு) வசதிகள்கூட இன்மையால் ஊழியர்கள் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்றனர் என்பதையும்;

      (vi) தமது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் முதியோர்களான ஓய்வுபெற்றோருக்கு அமர்வதற்கோ அல்லது நிற்பதற்கோ போதுமான இடவசதி இல்லாத உப தபால் அலுவலகங்கள் காணப்படுகின்றனவென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிட்ட நிலைமைகளை கருத்திற்கொண்டு ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் உப தபால் அலுவலகங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் தற்சமயம் செலுத்தப்படும் ரூபா 250/- மாதாந்த வாடகைக்கு பதிலாக போதியளவு வாடகைத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-04

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-04

பதில் அளித்தார்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks