பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0363/ ‘10
கெளரவ ஆர். யோகராஜன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கடந்த சில வருடங்களாக,
(i) “உள்ளூரில் நெசவுசெய்து பதனிடல்”,
(ii) “நிறம் மற்றும் வேலைப்பாடற்ற துணியை இறக்குமதி செய்து உள்ளூரில் பதனிடல்”
எனும் இரு முறைகளில் பாடசாலைச் சீருடைகளுக்கான துணி வழங்குதல் மேற்கொள்ளப்படுவதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி முறை (i) இன் மூலம் வழங்கப்பட்ட துணிகள் முடிவுறப்பெற்ற வடிவில் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதையும்,
(ii) துணிகளை வழங்கிய கம்பனிகள், பாரியளவில் நெசவு செய்வதற்கான அல்லது பதனிடுவதற்கான இயலளவு மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்க வில்லை என்பதையும்,
(iii) கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சினது 2009.11.24 ஆந் திகதிய கடித்தின் படி, அவர்கள் நூலை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதிப் பொருள் பட்டியலையும், சுங்க வெளிப்படுத்தல்களையும் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனார் என்பதையும்,
(iv) உள்ளூர்க்கைத்தொழிலை நிலைத்திருக்கச் செய்வதற்கென அவர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட உயர்விலையை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி யுள்ளனர் என்பதையும்,
(v) அரசாங்கம் துணியை நேரடியாக இறக்குமதி செய்திருந்தால், அரசு 1.5 பில்லியனை மீதப்படுத்தியிருக்க முடியுமென்பதோடு, அதனை கல்வியின் ஏனைய செலவீனங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதையும்
அவர் அறிவாரா?
(இ) இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களையும் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-08
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks