E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1143/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. 1143/ '16

      கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வாகரை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) அப் பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் உள்ளடக்கப்படும் மொத்த நிலப் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;

      (iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (v) அக்கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்களும் பெயர்களும் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அப் பிரதேச செயலாளர் பிரிவைத் தாபிக்கும்போது உத்தியோகபூர்வமாக எல்லைகளை நிர்ணயித்தல் நடைபெற்றுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) அப் பிரதேச செயலகத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்பாடுகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-23

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-04

பதில் அளித்தார்

கௌரவ நிமல் லான்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks