E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1152/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான மீகஹதென்ன, கும்பதூவ பிரதேசத்தில் 02 கற்குழிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதையும்;

      (ii) அதன் மூலம் சுற்றாடலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) மேற்படி கற்குழிகள் காரணமாக அருகிலுள்ள பெருந்தொகையான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கற்குழி உரிமையாளர்களால் அருகிலுள்ள வயல்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) பிரதேச வாசிகள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்திருந்தபோதிலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்படி இரண்டு கற்குழிகளின் உரிமங்களை இரத்துச் செய்யாதிருப்பதற்கான காரணம் யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-25

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks