பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹக்வட்டுனாவ மற்றும் கஹல்ல ஒதுக்கங்களின் உத்தேச யானைக்கடவைத் திட்டமானது வனசீவராசிகள் முகாமைத்துவக் குழுவொன்று மூலமாக தயாரிக்கப்பட்டிருப்பின் அதன் அங்கத்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை;
(ii) அது சம்பந்தமாக வெளிக்கள ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது எப்போது; சம்பந்தப்பட்ட வனசீவராசிகள் முகாமைத்துவக் குழு சந்தித்த சமய மற்றும் சமுதாய அமைப்புக்கள் யாவை;
(iii) இது சம்பந்தமாக சுற்றாடல் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதில் பங்கேற்ற சுற்றாடல் அமைப்புகள்/ சுற்றாடலியலாளர்கள் யாவர்;
(iv) அவ்வறிக்கையை சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இத்தகைய திட்டமொன்று தயாரிக்கப்படவேண்டிய விஞ்ஞானரீதியான முறையியல் யாது; உத்தேச திட்டம் அந்த முறையியலுக்கு அமைவாகவா தயாரிக்கப்பட்டுள்ளதா;
(ii) உத்தேச யானைக்கடவைத் திட்டத்தை கஜ-மித்துறு அமைப்பு அங்கீகரித்திருப்பின் அது எக்காலத்தில் எவரால்;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி திட்டம் மாவட்ட இணைப்புக் குழுவினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வேளையில் அதனைப் பொருட்படுத்தாமல் பிரதேச செயலாளர் அது சம்பந்தமாக இடையீடு செய்கிறார் என்பதையும்;
(ii) மாவட்ட இணைப்புக் குழுவினை மீறிச்செல்ல பிரதேச செயலாளருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டிருப்பின் அது எவரால்;
என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-04
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-04
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks