E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1170/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 செத்தெம்பர் தொடக்கம் 2015 பெப்ருவரி வரையான காலப்பகுதியில் லங்கா சதொச மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது;

      (ii) இதற்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டனவா;

      (iii) ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பித்த விலைகள் யாவை;

      (iv) இறக்குமதி செய்த அரிசியை விடுவிப்பதற்கு மற்றும் தாமதக் கட்டணங்களுக்காக இலங்கைச் சுங்கத்திற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      (v) ஒரு கிலோ அரிசியின் இறக்குமதி விலை மற்றும் விற்பனை விலை தனித்தனியாக யாது;

      (vi) அதற்கிணங்க லங்கா சதொசவிற்கு நேர்ந்த நட்டம் யாது;

      (vii) இந்த தொகையிலிருந்து விற்பனை செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது;

      (viii) பழுதடைந்த அரிசியின் அளவு மற்றும் அரிசியை விலங்குணவாக விற்பனைசெய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த திகதி யாது;

      (ix) இவ்விதமாக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் அளவு, ஒரு கிலோ அரிசியின் விலை மற்றும் நேர்ந்த நட்டம் வெவ்வேறாக யாது;

      (x) விலங்குணவாக மேற்படி பழுதடைந்த அரிசியை கொள்வனவு செய்த நிறுவனம் மற்றும் அளவு யாது;

      (xi) அரிசி இறக்குமதி தொடக்கம் விற்பனை வரையான ஒட்டுமொத்தச் செயற்பாட்டினுள் லங்கா சதொச செலவிட்ட பணத்தொகை, ஈட்டிய பணத்தொகை மற்றும் நட்டம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-06

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-06-21

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks