பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0374/ ‘10
கெளரவ றவூப் ஹக்கீம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவின் , கொழும்பு 10, மாளிகாவத்தை வீதி, 159/டீ/47 ஆம் இலக்கத்தில் வசிக்கும் அப்துல் சமத் (வயது 38) பிறந்தது முதல் காக்கை வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டவர் என்பதையும்,
(ii) அந்நோய்க்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற வேண்டிய தேவையின் அடிப்படையில், அவர் கொழும்பு வைத்தியசாலை சிகிச்சை நிலையத்திற்கு பதிவிலக்கம் B/37/04 இன் கீழ் மாதாந்தம் செல்ல வேண்டியவர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) அந்நோய் காரணமாக அவர் நிரந்தர தொழிலில் ஈடுபட முடியாத, நிரந்தர வருமான வழியற்ற வறுமையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அவருக்கு சமுர்த்தி நிதியுதவைியை வழங்குமாறு வைத்தியசாலையின் சுகாதார அபிவிருத்தி உதவியாளரினால் பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும், கொழும்பு பிரதேச செயலாளருக்கும் 2008.3.22 ஆம் திகதி, ம/சு/அ/உ/1/3/8 இலக்கம் கொண்டதும் இறுதியாக 2009.11.30 ஆம் திகதிய கடிதம் மூலம் பரிந்துரை செய்து கோரிக்கை விடுத்திருந்தும், இதுவரை அவருக்கு அந்த சமுர்த்தி நிதியுதவி கிடைக்கவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனின், திருமணமாகாத அப்துல் சமதுக்கும் அவரில் தங்கி வாழும் முதியவர்களான அவரது பெற்றோருக்கும் தாமதமின்றி சமுர்த்தி நிதியுதவியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-05
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks