E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1276/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.

    1. 1276/ '16

      கௌரவ கஞ்சன விஜேசேகர,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) வௌிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்வதிலும் மக்களது போசாக்குத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் பங்களிப்பை வழங்குகின்ற கடற்றொழிலின் இடையறா இருப்பை ஏற்றுக்கொள்கிறாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மாத்தறை மாவட்டத்தின்,

      (i) கடற்றொழில் துறைமுகங்கள், நங்கூரமிடும் தளங்களின் எண்ணிக்கை மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;

      (ii) ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய பதிவு செய்யப்பட்டுள்ள பலநாள் கலங்கள் மற்றும் ஒருநாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் வசிக்கின்ற கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை, தனித்தனியாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தில்,

      (i) கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

      (ii) மானிய அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள பலநாள் கலங்கள் மற்றும் ஒருநாள் கலங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக மானிய அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மீன்பிடி உபகரணத் தொகுதிகள், செய்திப் பரிமாற்ற இயந்திரங்கள் மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின்படி தனித்தியாக யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-03

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks